உள்ளூர் செய்திகள்

பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையம்.

பாலசமுத்திரத்தில் பூட்டிக்கிடக்கும் போலீஸ் உதவி மையம்

Published On 2023-08-22 05:25 GMT   |   Update On 2023-08-22 05:25 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது.
  • ஆனால் அமைக்கப்பட்டு உபயோகம் இல்லாமல் அந்த மையம் பூட்டியே கிடப்பதால் அப்பகுதியில் குற்ற சம்பவம் அதிகரித்து வருகிறது.

பழனி:

பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாலசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் பழனி தாலுகா போலீஸ்நிலையத்துக்கு உட்பட்டது. ஆனால் தாலுகா போலீஸ்நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பாலசமுத்திரம் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அவ்வாறு நடக்கும்போது நெய்க்காரப்பட்டியில் இருந்துதான் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்து செல்கின்றனர். எனவே பாலசமுத்திரத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்ற சம்பவங்களுக்கு உடனடி தீர்வு காணவும் போலீஸ் உதவி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மாதங்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அமைக்கப்பட்டு உபயோகம் இல்லாமல் அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பாலசமுத்திரம் பகுதியில் குற்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலசமுத்திரம் பகுதியில் மண் அள்ளி வரும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்துகள் அதிகம் நடப்பதாக கூறி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தாமதமாக வந்தனர்.

எனவே பாலசமுத்திரம் போலீஸ் உதவி மையத்தை திறந்து அங்கு பணியில் போதிய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News