உள்ளூர் செய்திகள்

ரேஸ்கோர்சில் போலீஸ் உதவி மையம் தொடக்கம்

Published On 2023-02-08 15:12 IST   |   Update On 2023-02-08 15:12:00 IST
  • பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
  • அடிப்படை பிரச்சினைகளையும் புகாராக அளித்துள்ளனர்.

கோவை,

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோறும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்க உத்தரவிட்டார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். லட்சுமி மில் சந்திப்பில் வாகனஓட்டிகள் சிக்ன லுக்காக காத்திருக்கும் போது அவர்களது மன அழுத்தத்தை போக்க இசை ஒலிக்கப்பட்டு வருகிறது.

புத்தக வாசிப்பை மேம்படுத்த, போலீசாரின் மன இறுக்கத்தை போக்க கோவை மாநகர போலீஸ் சார்பில், போலீஸ் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அடுத்தபடியாக, ஆட்டோக்களில் நூலகம் திட்டம் தொடங்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஸ்ட்ரீட் லைப்ரரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடை பயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க வசதியாக, வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும்.

இங்கு ஏப்போதும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ேமலும் ரேஸ்கோர்ஸ் ஸ்மார் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரேஸ்கோர்ஸ் பரபரப்பாகவே காணப்ப டும். காலை, மாலை நேரங்க ளில் பொதுமக்கள் நடை பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டார பகுதியில் அடி-தடி பிரச்சினை, காதல் ஜோடிகளின் அத்துமீறல் நடப்பதாக புகார் வந்து கொண்டு இருந்தது.

இதனை தடுக்கவும், பொதுமக்கள் புகார் அளிக்கவும் ஏதுவாக தற்போது உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 2 போலீசார் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்க ளிடம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

போலீசார் அதனை குறித்து கொண்டு அதிகாரி களிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பிரச்சினைகள் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அந்த பகுதி யின் அடிப்படை பிரச்சி னைகளையும் புகாராக அளித்துள்ளனர்.

Tags:    

Similar News