உள்ளூர் செய்திகள்

கவாத்து பயிற்சி அளித்தவர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் பரிசு வழங்கிய போது எடுத்த படம். அருகில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா உள்ளனர்.

பாளையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ் கமிஷனர்

Published On 2022-12-14 15:13 IST   |   Update On 2022-12-14 15:13:00 IST
  • நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
  • ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சி முடித்து களப்பணிக்கு செல்லும் ஊர்காவல் படையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனபன போன்ற அறிவுரைகளை வழங்கி கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், கவாத்து போதகர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா , உதவி கமிஷனர்கள் சரவணன், மாநகர ஆயுதப்படை இன்ஸ் பெக்டர் டேனியல் கிருபாகரன் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News