விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்
நாங்குநேரியில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்
- நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
- நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு:
நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நான்குநேரி, மூன்றடைப்பு, மற்றும் மூலைக்கரைப்பட்டியில் இருந்து வந்திருந்த போலீசார் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
புறவழிச்சாலை வழியாக சென்ற ஊர்வலம் நாங்குநேரியில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது ஒலிப்பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணிந்தால் விபத்தில் சிக்கினால் கூட உயிர் தப்பலாம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இந்த ஊர்வலம் நாங்குநேரி திசையன்விளை செல்லும் ரோட்டில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.