உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் நடவடிக்கை

Published On 2023-04-25 12:14 IST   |   Update On 2023-04-25 21:44:00 IST
  • சப்-கலெக்டர் சுவேதா சுமன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆய்வு செய்தனர்.
  • சாலை விபத்துக்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்து விபத்து நடக்கும் இடங்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் இணைந்து சாலை விபத்துக்கள் நடக்கும் காரணங்களை கண்டறிந்து, சாலை விபத்துக்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த அறிவுரையின்பேரில் இன்று சிதம்பரம் - கடலூர் சாலை, சிதம்பரம் வண்டிகேட் அருகில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதனால் அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க சிதம்பரம் சப்- கலெக்டர் சுவேதா சுமன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் விபத்து ஏற்படக்கூடிய பகுதியை கூட்டு ஆய்வு செய்து வாகன விபத்துக்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News