உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஜி.ேக.மணி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

பா.ம.க.வின் 35-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

Published On 2023-07-18 14:57 IST   |   Update On 2023-07-18 14:57:00 IST
  • வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • தருமபுரி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி, 

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் தருமபுரி  வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். பா.ம.க. கவுரவத் தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னாள் எம்.பி. மரு.இரா.செந்தில், மாநில துணை தலைவர்கள் பெ.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், அணிகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News