உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி- 100 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது

Published On 2023-06-17 09:35 GMT   |   Update On 2023-06-17 09:35 GMT
  • 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது.
  • வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த முடிவில் திருப்தி இல்லாத 1,300 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கும், 2,300 மாணவர்கள் மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்தனர். இதற்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. பெரும்பாலும் 10 மதிப்பெண்கள் கொண்ட வினாக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணில் குளறுபடி நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சம்பந்தபட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. விசாரணையில் தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News