உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே பிளஸ் - 2 மாணவன் தூக்குபோட்டு சாவு: பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு

Published On 2023-05-05 12:58 IST   |   Update On 2023-05-05 12:58:00 IST
  • சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டிலுள்ள கருப்பன் மகன் பாலு, இந்திரா ஆகியோர் வந்து, எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை தி ருடிவி ட்டாய் என திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
  • அவர்கள் தொடர்ந்து, வாய்கூசாமல் திட்டியதால், வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டிகொண்டார்.

கள்ளக்குறிச்சி, மே.5-

தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் வேலைக்குச் சென்றார். அப்பொழுது இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள கருப்பன் மகன் பாலு, இவரது மனைவி இந்திரா ஆகியோர் மாட்டுக் கொட்டகையில் இருந்த ருத்திரபதியிடம் எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த லட்சுமி விரைந்து வந்து தனது மகனை சமாதானம் செய்ததாகவும், அப்போது பாலுவும் அவரது மனைவியும் ருத்திரபதியை பார்த்து வாய் கூசாமல் பொய் பேசுறியே, நீ எல்லாம் செத்து தொலைய வேண்டியது தானே என கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதனை கேட்ட ருத்திரபதி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து லட்சுமி மீண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலு அவரது மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மாணவன் ருத்திரபதி விருகாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்தார். வருகின்ற 8-ந் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News