உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் உழவாரப்பணி

Published On 2023-07-16 09:42 GMT   |   Update On 2023-07-16 09:42 GMT
  • உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
  • கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தஞ்சாவூர்:

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு உழவாரப்பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று காலை புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதற்கு மன்ற நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார்.

இதில் இந்த மன்றத்தை சேர்ந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து 250 பேர் கலந்து கொண்டு வளாகத்தில் இருந்த தேவையில்லாத புல் செடிகளை அகற்றி சுத்தப்ப டுத்தினர். குப்பைகளை அகற்றினர்.

இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை-2005 இயக்கம், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், உழவாரப்பணி குழு நிர்வா கிகள் புண்ணியமூர்த்தி ,செழியன், சீனிவாசன், முத்தமிழ் ,ஜெய்சங்கர் ,விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

இதையடுத்து பெரிய கோவிலில் இருந்து உழவாரப்பணி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது தெற்கு வீதி , திலகர் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்றது. பின்னர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் அந்தந்த கோயில்களில் சுத்த பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இன்று மாலையில் பெரிய கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளன.

Tags:    

Similar News