உள்ளூர் செய்திகள்

அறிஞர் அண்ணா கல்லூரியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2023-08-21 10:13 GMT   |   Update On 2023-08-21 10:13 GMT
  • ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.
  • நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி போலுப் பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதற்கு கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

அவர் பேசும் போது, மனிதனை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் வாழ செய்வதற்கு உருவாக்கப் பட்ட மதங்கள், இன்று மனிதனை அடிமையாக்கி கொண்டி ருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது. இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பவுத்த மதம் போன்றவை உள்ளது.

எந்த மதமும், கடவுளும் யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. இந்து சமயத்தில் அன்பே சிவம் என்று பகவத் கீதை சொல்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பா கவும், இல்லாதவர்களுக்கு தேவையானவையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதே போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பையும், அமைதியையும் போற்றி வாழ வேண்டும் என்று பவுத்த மதம் கூறுகிறது.

மனிதத்தை காத்து வாழ வேண்டும் என்று இஸ்லாமிய மதம் கூறுகிறது. மதங்கள் அனைத்தும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின. அனைத்து மதங்களும் ஒற்றுமையையும் அன்பையும் போதிக்கின்றன என கூறினார்.

இந்த விழாவில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர்கள் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, சரவண குமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பேரா சிரியர் தனசீலன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News