தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் கலெக்டர் ஷஜீவனா ஈடுபட்டார்.
தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி
- சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
தேனி:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், தேனி-அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த மிஷன் லைப் உறுமொழியினை அரசு அலுவலர்கள், பணியாளர்க ள் எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மஞ்சள் பைகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.
சுற்றுச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வு க்கும் அச்சுறு த்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது நாம் அனைவரின் முக்கிய பங்காகும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டி னைத் தவிர்க்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை கடந்த டிசம்பர் 2021-ல் தொடங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடும் பொருட்டு, பொது மக்களிடையே தொடர்ந்து "மீண்டும் மஞ்சப்பை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு இறுதி ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
முகாமில் 15 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணி யிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இறுதி ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 130 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.