உள்ளூர் செய்திகள்

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-13 09:13 GMT   |   Update On 2022-07-13 09:13 GMT
  • ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி லட்சுமியூரில் நடைபெற்றது
  • மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமேஸ்வரி முன்னிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து பொது மக்களுக்கு எடுத்துக்கூறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு மஞ்சள் பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மணிவண்ணன், சண்முகநாதன் விவேகானந்தன் , அன்ன புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர் . ஊராட்சி மன்ற செயலர் பாரத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News