உள்ளூர் செய்திகள்

வண்டகம்பாளையம் ஊராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகள்.

நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்

Published On 2022-12-26 07:49 GMT   |   Update On 2022-12-26 07:49 GMT
  • ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

திருவாரூர்:

திருவாரூர் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.

இந்த கிராமத்தின் வழியே பாய்ந்து ஓடும் வெட்டாறு கரைகளில் உள்ள படுகை ஓரங்களில் ஏராளமான பன்றிகள் முகாமிட்டுள்ளன.

நகரங்களில் பன்றி வளர்ப்பதற்கான ஏதுவான சூழல் இல்லாததால் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர்.

இப்பன்றிகள் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.

பன்றிகளுக்கு உணவான கோரை புல் கிழங்குகள் கிடைக்காததால், வயல்வெளிகளில் நுழைந்து நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று சேதப்படுத்துகின்றன.

இதனால் வண்டாம்பாளை, திருப்பள்ளி முக்கூடல், விளாகம் ஆகிய கிராமங்களில் உள்ள நெல் வயல்கள் சேதமாகியுள்ளது.

வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் வீணாகிறது.

உடனடியாக இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News