உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தீ குளிக்க முயற்சிப்பதை படத்தில் காணலாம்.

திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

Published On 2022-07-25 07:59 GMT   |   Update On 2022-07-25 07:59 GMT
  • திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
  • நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி வள்ளி (வயது60) கூலி தொழிலாளி. தனது மகன் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் சாலை விபத்தில் இறந்து போன மகனுக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. அந்த பணத்தினை அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் செந்தில் (43) என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 40 ஆயிரத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நாள் வரை மீதி தொகையை தராமல் இழுத்த–டித்தார். பணம் கேட்டால் ஆபாசமாக திட்டி உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து வள்ளி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் மன உளைச்சலான மூதாட்டி இன்று காலை திட்டக்குடி டி.எஸ்பி. அலுவலகம் முன்பு மண்எண்ணை கேனுடன் வந்து தனது உடல் முழுவதும் மண்எண்ணயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர் டி.எஸ்பி. அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் . உங்களது பணம் விரைவில் பெற்றுத் தரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மூதாட்டி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

Similar News