உள்ளூர் செய்திகள்

கேன்களில் பெட்ேரால், டீசல் வழங்குவதை தவிர்க்கும் பங்குகள் சேலத்தில் உரிமையாளர்கள் அதிரடி

Published On 2022-09-28 09:53 GMT   |   Update On 2022-09-28 09:53 GMT
  • இந்திய அரசு அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • வீட்டில் கடந்த 25-ந்தேதி மண்எண்ணை- பெட்ரோல் பாட்டில் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர்.

சேலம்:

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்களில் இந்திய அரசு அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு அலுவலகங்கள் குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள், பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

சேலம்...

கோவை, மதுரை, திண்டுக்கல்லை தொடர்ந்து ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் சேலம் அம்மாப்பேட்டை பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் (வயது 56) என்பவருடைய வீட்டில் கடந்த 25-ந்தேதி மண்எண்ணை- பெட்ரோல் பாட்டில் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர். அதுபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடியிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளில் யாருக்கும் கேன்களில் பெட்ேரால், டீசல் வழங்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்படி பங்க் உரிமையா ளர்கள் தங்களுடைய ஊழியர்களிடம் யாராவது பெட்ரோல் கேன்களை கொண்டு வந்து கேட்டால் அவர்களுக்கு கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டாம். அவர்கள் நேரில் வாகனங்களை கொண்டு வந்து நிரப்புமாறு சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கேன்களை கொண்டு வந்து பெட்ரோல், டீசல் கேட்டவர்களுக்கு வழங்க முடியாது. வாகனங்களை கொண்டு வந்து நிரப்பி கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் கேன்களில் வழங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News