ஆபத்தான நிலையில் காணப்படும் நீர்தேக்க தொட்டி
கழுநீர்குளத்தில் புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
- கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் ஊரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
- இந்த தொட்டியின் தூண்கள் அனைத்திலும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் ஊரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
தற்பொழுது இந்த தொட்டியின் தூண்கள் அனைத்திலும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரமும் கீழே இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.
எனவே இந்த தொட்டியின் அருகில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியில் உடனடியாக புதிய குடிநீர் தொட்டி கட்டி தரவும், ஏற்கனவே இருக்கும் பழைய குடிநீர் தொட்டியின் மூலம் ஏற்பட உள்ள ஆபத்தை தடுக்க வேண்டும் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் யூனியன் கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் மாவட்ட கலெக்டரிடம் நேரில் கோரிக்கை மனு வழங்கினார்.