முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய அ.தி.மு.க -வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு
- மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி எஸ்.பி -யிடம் மனு அளித்தார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், தி.மு.க துணை செயலாளர் ரேணுகா தேவி எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-
கடந்த 20-ம் தேதியில் மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளனர். அதனை அ.தி.மு.க.வின் அனைத்து தலைவர்களும் ரசித்தனர். மேலும் இதனை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்கள்.
பொது வெளியில் விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்தரத்தை கொச்சைப்படுத்திய, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.