உள்ளூர் செய்திகள்

தாசில்தார் கண்ணனிடம் செம்பூர் பொதுமக்கள்ரெயில்வே பாதை சம்பந்தமாக மனு வழங்கியபோது எடுத்தபடம்.

ஏரல் தாசில்தாரிடம் செம்பூர் மக்கள் மனு

Published On 2022-09-17 09:00 GMT   |   Update On 2022-09-17 09:00 GMT
  • செம்பூர் பொதுமக்கள் தாசில்தார் கண்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
  • குழந்தைகள் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரியை அடுத்த செம்பூரில் மக்கள் பயன்பாட்டில் ரெயில்வே கேட் பாதை ஒன்று உள்ளது.இந்த பாதை வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர்.

தற்போது நெல்லை-திருச்செந்தூர் மின்சார பாதையாக மாற்றுவதால் இந்த ரெயில்வே கேட்டை நிரந்தரமாக எடுத்துவிட்டு அதன் அருகில் மாற்று பாதை ஒன்று அமைத்து, அடுத்த எல்.சி. முப்பதாவது கேட்டில் இணைப்பதாக கேள்விப்பட்டதை அறிந்த செம்பூர் பொதுமக்கள் ஏரல் தாசில்தார் கண்ணனை அலுவலகத்தில் நேரில் சந்தித்து செம்பூர் கேட் எடுக்கப்படாமல் தொடர்ந்து அதே இடத்தில் இருக்க ஆவண செய்யும்படி கேட்டு கொண்டு மனு அளித்தனர்.

இந்த ரெயில்வே கேட் மூடும் பட்சத்தில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்வ தற்கும், மருத்துவத்திற்காக ஆழ்வார் திருநகரி செல்வதற்கும், பள்ளிக்கு குழந்தைகள் செல்வதற்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் மனுவில் கூறி இருந்தனர்.

இம் மனுவை பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக தாசில்தார் கூறினார்.

Tags:    

Similar News