உள்ளூர் செய்திகள்

பெரியாண்டவர் - பொன்னியம்மாள் கோவில் திருவிழா

Published On 2023-01-30 15:13 IST   |   Update On 2023-01-30 15:13:00 IST
  • பெரியாண்டவர் , பொன்னியம்மாள் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது.
  • சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஓலப்பட்டியில் பெரியாண்டவர் - பொன்னியம்மாள் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி கோவில் பூசாரிகள் அழைத்தலும், சொர்ணம்பட்டியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சாமி சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கம்பைநல்லூர் லட்சுமி நாராயண சாமி கோவிலில் விளக்கேற்றி விழா தொடங்கியது. பின்னர் பெரியாண்டவர்-பொன்னியம்மாள் சாமிக்கு சீர் கொடுத்தலும், முப்பூஜையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News