உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

Published On 2023-03-27 13:16 IST   |   Update On 2023-03-27 13:16:00 IST
  • கற்பழிப்பு வழக்கில் கைதானவர்
  • சென்னை ஐகோர்ட் வாரண்ட் பிறப்பித்தது

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் மகேஸ்வரன் (வயது38). இவர் பெண்ணை கற்பழித்தது தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனர்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த கற்பழிப்பு வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டால் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேல் முறையீடு செய்து ஜாமினீல் வெளியே வந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு சரிவர ஆஜராகாத காரணத்தால் குற்றவாளி மகேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படி சென்னை ஐகோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இதன்படி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா குற்றவாளி மகேஸ்வரணை கைது செய்துள்ளார். 

Tags:    

Similar News