உள்ளூர் செய்திகள்

தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தல்

Update: 2023-03-28 06:26 GMT
  • சாலையின் குறுக்கே எழுப்பட்டுள்ள தடுப்பு சுவறை அகற்றிட பொதுக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
  • தனி நபர் ஒருவர் தடுப்பு சுவர் கட்டி சாலை அமையகூடாது என்று அடாவடி

பெரம்பலூர்,

பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பின்புறம் ரோஸ் நகருக்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றி சாலை வசதியை செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பின்புறம் தலையாட்டி சித்தர் ஆசிரமம் வழியாக ரோஸ் நகருக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் 250ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர். மேலும் இந்த சாலை ரோஸ் நகரை இணைக்கிறது. அங்கு 700க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலான இந்த சாலையை தார் சாலையாக மாற்றி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து நகராட்சி சார்பில் மண் சாலை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டு ஜல்லி கொட்டப்பட்டு நிரவல் செய்யப்பட்டது. இந்நிலையில் அச்சாலை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து சாலையை அமைக்ககூடாது என சாலையின் நடுவே சுவர் கட்டி பாதையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் இந்த சாலையில் தார் சாலை அமைக்கமுடியாமலும், பொதுமக்கள் செல்ல முடியாமலும் தவிர்த்து வருகின்றனர்.எனவே தனிநபர் ஆக்கிரமித்து கட்டியுள்ள தடுப்பு சுவரை அகற்றி அச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதோடு, தார் சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நகராட்சி தலைவர் அம்பிகா, நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் 3 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் ராதா மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News