உள்ளூர் செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு

Published On 2022-07-14 08:48 GMT   |   Update On 2022-07-14 08:48 GMT
  • அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங், தச்சுவேலை, கல்குவாரி, மரஆலை, உள்ளூர் கூலித்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறுவியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்கள், பால் வியாபாரிகள், மீனவர்கள், செங்கல்சூளை, தையல், பட்டு வளர்ப்பு, துப்புரவு தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், டிரைவர், நடைபாதை வியாபாரிகள் என 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது விவரங்களை இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இ-ஸ்ராம் (e-shram) அல்லது என்டியூடபுள்யூ (nduw) இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்களது ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், அலைபேசி எண் ஆகியவற்றுடன் பொதுசேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். அல்லது இணைய வசதி இருப்பின் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்வதற்கான வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. இ.எஸ்.ஐ. சேமநலநிதி பிடித்தம் செய்யும் பணியாளராக இருக்க கூடாது. தொழிலாளர்கள் அரசுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News