உள்ளூர் செய்திகள்

அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-01-08 12:30 IST   |   Update On 2023-01-08 12:30:00 IST
  • அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
  • மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த பகுதிகளில் சாலை விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Tags:    

Similar News