உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நடைபெற்ற யாதவர்கள் குடும்பவிழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Published On 2023-02-28 08:07 GMT   |   Update On 2023-02-28 08:07 GMT
  • பெரம்பலூரில் நடைபெற்ற யாதவர்கள் குடும்பவிழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கபட்டது
  • விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின்சார்பில் யாதவர்களின் குடும்பவிழா, துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாளின் ஆன்மீக பிரசங்கம், வீரன் அழகுமுத்துகோன் வரலாறு பிரசங்கம், கிருஷ்ணரின் மேன்மையை கூறும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடந்தது.

விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத்தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50ஆயிரம், ரூ.25ஆயிரம்,ரூ.10ஆயிரம் மற்றும் 120-பேர்களுக்கு தலா ரூ2ஆயிரம் கல்வி உதவித்தொகைளையும், எசனை, அன்னமங்கலம் யாதவ திருமண மண்டபங்களை புனரமைக்க தலா ரூ.50ஆயிரம் நிதிஉதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி, குடிமைப்பணி தேர்வு ஆகியவற்றில் யாதவகுல மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும். அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.அவருக்கு வெள்ளிவீரவாளை, மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்.

விழாவிற்கு மாவட்ட அவைத்தலைவர் செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளி தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளர் மகாத்மா பள்ளி ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் கொம்புதி செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி செயலாளர், டாக்டர் முத்துலட்சுமி, இளைஞரணி செயலாளர் பொட்டல்.துரை, சட்ட ஆலோசகர் சபாபதி, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் யாதவ மகாசபையின் பணிகள் , செயல்பாடுகள், சேவைகள் குறித்தும், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஒன்றிய நிர்வாகிகள் திருவள்ளுவர், சிறுநிலா விஜயா(மகளிரணி) ஆகியோர் மாவட் ட, ஒன்றிய அமைப்புகளின் பணிகள் குறித்தும் கருத்துரை ஆற்றினார்கள்.

முக்கிய பிரமுகர்களுக்கு மாவட்ட பொருளாளர் ராமர் பொன்னாடை அணிவித்தார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் பத்திரம் சிவக்குமார், பூலாம்பாடி வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், முத்துசாமி உள்பட 4 ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளான பேர் கலந்துகொண்டனர். 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வளர்ந்த தென்னங்கன்றுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்கி, பிரதான சாலைகள் வழியாக சென்று விழா நடந்த மகாலை அடைந்தது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு பெரம்பலூர் பெருமாள்,சிவன் மற்றும் பாலமுருகன் கோவில்கள் சார்பில் சிறப்பான வரவேற்பும், பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. முடிவில் நகரத்தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.





Tags:    

Similar News