உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-30 14:05 IST   |   Update On 2023-08-30 14:05:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரத்து 750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு அரசின் காலி பணியிடங்களில் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த மழை பெய்ததால், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒதுங்கி நின்று தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இதில் மாவட்ட செயலாளர் சித்ரா, ஒன்றிய தலைவர் தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகிகள், கலெக்டரை சந்தித்து, ஏற்கனவே கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சங்க உறுப்பினர்களிடம் இருந்து ரத்த கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவை கொடுத்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News