புறவழிச்சாலையை மாற்றியமைக்க கோரிக்கை
- புறவழிச்சாலையை மாற்றியமைக்க கோரிக்கை வைத்தனர்
- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கீழஉசேன் நகரம் கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், எங்கள் ஊரில் புதிதாக அமைக்க உள்ள அரியலூர் புறவழிச்சாலை கீழஉசேன்நகரம் கிராம பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூராக உள்ளது.மேலும் தொழில் பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மறு ஆய்வு செய்து மாற்றுப்பாதையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய தொழிலாளர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ 5 ஆயிரம் மற்றும் வேட்டி,துண்டு, புடவை ஆகியவை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.