வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி அனுக்கூர், அ.குடிகாடு கிராமத்தில் தபால் அனுப்பும் போராட்டம்
- வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி அனுக்கூர், அ.குடிகாடு கிராமத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை அடங்கிய கடிதங்களை அனுப்பினர்.
அகரம்சீகூர்,
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி, பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அனுக்கூர் மற்றும் அ. குடிக்காடு கிராமத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. மாநில பொதுகுழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன் தலைமையில் மேளதாளங்களுடன், 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக, தபால் நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை அடங்கிய கடிதங்களை அனுப்பினர்.
இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரவேலன், பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் தேவகி ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராஜா, மருத்துவர் நக்கீரன், கிராம முக்கியஸ்தர்கள் ஆறுமுகம் துரைராஜ், மணிவேல், கிளை செயலாளர் தாமரை செல்வன் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.