உள்ளூர் செய்திகள்

விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு

Published On 2023-01-16 13:02 IST   |   Update On 2023-01-16 13:02:00 IST
  • 18-ந் தேதி வழங்கப்படுகிறது
  • விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9ம்தேதி தொடங்கப்பட்டது. 13ம்தேதி வரை 5 நாட்களிலும் நாளொன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைத்து அங்காடிகளிலும் வழங்க விநியோகிக்கப்பட்டது. விடுப்பட்டவர்களுக்கு 14ம்தேதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 485 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 6 ஆயிரத்து 676 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு நாளை மறு நாள் (18ம்தேதி) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு பெறப்படாமல் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நாளை மறு நாள் முதல் தங்களுக்குரிய ரேசன் கடையில் பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிரிவாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News