முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு
- முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என சிஐடியூ சார்பில் கோரிக்கை வைத்தனர்
- சி.ஐ.டி.யூ. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். இதில் கட்டுமானம், வீட்டுவேலை, தையல், சுமைப்பணி, சலவை, அமைப்புசாரா, ஆட்டோ, சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகிேயார்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும், பென்சன் தொகையை மாதம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்கவேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரிசெய்து எளிமைப்படுத்தவேண்டும், முத்தரப்பு கமிட்டிகளை உத்தரவாதப்படுத்தவே ண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிஐடியூ மற்றும் முறைசார தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.