உள்ளூர் செய்திகள்

உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மனு

Update: 2023-03-28 06:28 GMT
  • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
  • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவிதொகையை மீண்டும் வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாற்றுதிறனாளி கலெக்டர் கற்பகத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் மாற்றுத்திறனாளி . எனக்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.ஆயிரத்து 500 பெற்று வந்தேன்.தற்போது எந்தவித விசாரணையின்றி மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி சட்டத்திற்கு முரணாக உதவி தொகை நிறுத்தம் செய்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அளிக்கப்பட்ட உதவி தொகை மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் கற்பகம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News