உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published On 2022-06-10 12:11 IST   |   Update On 2022-06-10 12:11:00 IST
  • சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

கரூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணிமேகலை தலைமையில் பெரம்பலூா் பாலக்கரையிலிருந்து, புகா் பேருந்து நிலைய வளாகம் வரை கோரிக்கை விளக்க நடை பயணம் மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு சத்துணவு ஊழியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மேலும், சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

Tags:    

Similar News