உள்ளூர் செய்திகள்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-15 15:24 IST   |   Update On 2022-11-15 15:24:00 IST
  • மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.4500 போதுமானதல்ல. எனவே பணி நிரந்தரம் செய்து, குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, பயணப்படி வழங்க வேண்டும். பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News