உள்ளூர் செய்திகள்

புத்தகங்களை நண்பர்களாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம்-தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விழாவில் பல்கலைக்கழக வேந்தர் செல்வம் பேச்சு

Published On 2023-03-03 06:01 GMT   |   Update On 2023-03-03 06:01 GMT
  • புத்தகங்களை நண்பர்களாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம் என தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விழாவில் பல்கலைக்கழக வேந்தர் செல்வம் பேசினார்
  • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிதியியல் ஆய்வுகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் நிதியியல்துறை மற்றும் ஸ்மார்ட் ஜெர்னல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் ஆகியவை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை நடத்தியது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்து, கருத்தரங்கம் தொடர்பான குறுந்தகட்டினை வெளியிட அதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பெற்று கொண்டார்.

செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார்.இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பேசும் போது, மாணவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். மொழி புலமை இருந்ததால்தான் முழுமையான கல்வியறிவு பெற்றவர்களாகவும், பல புதுமையான படைப்புகளை படைக்க முடியும். புதுமையான படைப்புகளை உருவக்குவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் கிடைக்கும். மாணவர்கள் புத்தகங்களை நண்பர்களாக்கி கொண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் .

அது மட்டும் இல்லாமல் அன்றாட உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.கேரளா, திருச்சூர் வேளாண்மை பல்கலைக்கழக கூட்டுறவு வங்கி மற்றும் மேலாண்மை துறை தலைவர் வீரக்குமரன், மலேசியா பல்கலைக்கழக தொழில் நுட்பம் மாராவின் வணிக மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் வீரபாண்டியன், டாக்டர் அஹ்மத் ரைஸ் முகமது மொக்தார் ஆகியோர் பேசினர். இதில் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றம் 700க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா வரவேற்றார். முடிவில் கல்வி சார் டீன் தீபலெட்சுமி நன்றி கூறினார்.







Tags:    

Similar News