- 70லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் பில்லங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்கிற கொளஞ்சி என்பவர் லாரி ட்யூப்களில் வைத்து சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 70 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள் என்கிற கொளஞ்சியை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.