உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு

Published On 2023-01-07 13:24 IST   |   Update On 2023-01-07 13:24:00 IST
  • பெரம்பலூரில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது
  • ஆய்வின்போது சாலைப்பணிகள் தரத்துடனும், விரைவாகவும் உரிய காலத்தில் முடிக்கவேய்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளான துறைமங்கலம் பங்களா சாலையின் தரம், அருமடல் செல்லும் சாலை அகலப்படுத்தும் மற்றும் மேம்பாடு செய்யும் பணியின் தரத்தினையும் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் கோதண்டராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சாலைப்பணிகள் தரத்துடனும், விரைவாகவும் உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சாலைகளின் ஓரத்தின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு அவைகளை உரிய காலத்தில் பராமரிக்கவும், சாலைப்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ், பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் கலைவாணி, உதவிக்கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவிபொறியாளர் ஆறுமுகம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு கோட்டப்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.





Tags:    

Similar News