திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கிலும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. அதன் பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர், சோமா ஸ்கந்தர் அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர்.இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சசிக்குமார், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, செட்டிகுளம், பாடாலூர், இரூர், கூத்தனூர்,பொம்ம னப்பாடி, சத்திர மனை, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர் கேட், நாட்டா ர்மங்கலம், பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார்கள், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், மின் ஊழியர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முக்கிய வீதிகளின் வழியாக சென்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தடைகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.