உள்ளூர் செய்திகள்
ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு
- ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்
- காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்
பெரம்பலூர்:
திருச்சி சரக டிஐஜி சரவனசுந்தர் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஆயுதப்படை காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், காவல் நிலையங்களில் பயன்படுத்தி வரும் வாகனங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 8 பேரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்