உள்ளூர் செய்திகள்

வருவாய்த் துறையினர் தர்ணா போராட்டம்

Published On 2023-08-31 11:45 IST   |   Update On 2023-08-31 11:45:00 IST
  • பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினர் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • தாசில்தார் பணிநீக்கம் கண்டித்து கலெக்டர் அலுவலக் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்

பெரம்பலூர்,

கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைதை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியனின் பணி நீக்க காலத்தை ரத்து செய்யகோரியும் நேற்று பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பணியினை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் மனோஜ்முனியனின் பணி நீக்க காலத்தை ரத்து செய்ய கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும், பணி நீக்க காலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் நேற்று கையொப்பமிட்டு பணி புறக்கணிப்பு செய்தனர். மேலும் மாவட்ட பொருளாளர் குமரிஆனந்தன் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக போர்ட்டிகோவில் வருவாய்த்துறை அலுவலர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், டிஆஓ அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய அனைத்து அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News