உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
- சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- வழக்கு பதிய புகார் அளிக்கப்பட்டது
குன்னம்,
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நரிக்குறவ சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நரிக்குறவ சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாகவும், இதனால் நாங்கள் மனவேதனை அடைந்ததாகவும், சீமான் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் நல பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பாடாலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.