உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-14 13:20 IST   |   Update On 2023-03-14 13:20:00 IST
  • கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்

பெரம்பலூர்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் மெத்தனப் போக்கினை கண்டிப்பது, பதவி உயர்வு வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க கிளை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டரை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஊகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விஏஓவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News