உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் - அதிகாரி தகவல்

Published On 2022-10-16 09:12 GMT   |   Update On 2022-10-16 09:12 GMT
  • நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் - அதிகாரி தகவல்
  • கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

பெரம்பலூர் :

பெரம்பலூரில் இனிப்பு மற்றும் பலகாரங்களை தயாரிக்கும் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளில் உணவை அடைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

நுகர்வோருக்கு உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News