உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் போராட்டம்

Published On 2023-03-27 13:25 IST   |   Update On 2023-03-27 13:25:00 IST
  • மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரசார் போராட்டம்
  • வாய், கைகளில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

பெரம்பலூர், 

பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து வாய் மற்றும் கையில் கருப்பு துணி கட்டி அறவழிப்போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்ட் காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், அவரது எம்பி பதவியினை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் வாய் மற்றும் கைகளில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், அய்யம்பெருமாள், நகர தலைவர்கள் தேவராஜன், நல்லுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லதம்பி, வக்கீல் பிரிவு தலைவர் ரஞ்சித்குமார், வட்டார தலைவர்கள் சின்னசாமி, பாக்யராஜ், ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மகேந்திரன், சட்டமன்ற ஊடக பிரிவு தலைவர் வசந்த், விவசாய மாவட்ட பிரிவு தலைவர் சித்தர், மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News