உள்ளூர் செய்திகள்

சிறப்பான மருத்துவ சேவையை வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-03-05 12:11 IST   |   Update On 2023-03-05 12:11:00 IST
  • பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்
  • மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் கற்பகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விபத்து மற்றும் அவசர காலத்தில் வருபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும் என்றார். ஆய்வின்போது மருத்துவமனையின் இருக்கை அலுவலர் டாக்டர் சரவணன், தேசிய சுகாதார திட்ட டாக்டர் அன்பரசு மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News