உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 263 அரசு பள்ளிகளில் தொடக்கம்

Published On 2023-08-24 13:30 IST   |   Update On 2023-08-24 13:30:00 IST
முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூரில் உள்ள 263 அரசு பள்ளிகளில் தொடங்கப்படுகிறது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளிக்கு விரிவுப்ப டுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 180 மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவுப்ப டுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கான சோதனை முயற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ள பள்ளிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News