பெரம்பலூர் கிராம பஞ்சாயத்து இளைஞர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் பயிற்சி
- பெரம்பலூர் கிராம பஞ்சாயத்து இளைஞர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது
- இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் மற்றும் சேவை, ஸ்மோக் டிடெக்டர் அலாரம் பொருத்துதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது. பயிற்சி கால அளவு 13 நாட்கள். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் குடும்பஅட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 13-ந் தேதிக்குள் ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து பதிவு செய்யவும். அல்லது 04328-277896, 9488840328, 8489065899 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.