உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது

Published On 2023-03-15 14:26 IST   |   Update On 2023-03-15 14:26:00 IST
  • பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க காரில் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • பா.ஜ,க.வினர் சாலை மறியல் போராாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அகரம்சீகூர்,

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திண்டிவனம் நகரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காரைக்குடியிலிருந்து திருச்சி, பெரம்பலூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான கடலூர் மாவட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தை கட்சியினர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்வதாகவும் தெரிவித்தனர்.காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்று கைதுக்கு எச். ராஜா சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அவரது காரிலேயே கடலூர் மாவட்டத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து ெசன்றனர்.எச். ராஜா கைது செய்யப்படுவதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் , பா.ஜ.க.வினர் காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News