உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் வங்கி அதிகாரி மர்ம சாவு

Published On 2023-08-23 12:13 IST   |   Update On 2023-08-23 12:13:00 IST
  • பெரம்பலூரில் வங்கி அதிகாரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
  • வங்கி அதிகாரி உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசார் விசாரணை

குன்னம், 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காந்தி நகர், வல்லாய் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 44). இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.விஜயராமன் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நிலக்கோட்டையில் இருந்து தினந்தோறும் ெபரம்பலூருக்கு வர முடியாததால், அய்யலூர் ஜீவா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அலுவலகம் சென்று வந்தார்.இந்த நிலையில் நேற்று அவர் பணிக்கு செல்லவில்லை, எந்த தகவலும் தரவில்லை. இதனால் அலுவலகத்தில் இருந்து அவரது செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போனையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக விஜயராகவன் வீட்டிற்கு வந்தனர்.அப்போது விஜயராமன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விஜயராமன் தங்கியிருந்த அறையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கி அதிகாரி மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News