உள்ளூர் செய்திகள்

அமைதியாக நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி

Published On 2022-11-07 14:56 IST   |   Update On 2022-11-07 14:56:00 IST
  • அமைதியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது
  • பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்

பெரம்பலுார்:

பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாக்களை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெரம்பலூரில் பதசஞ்சலன் சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற இந்த பேரணியை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு பா.ஜ.க.வினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 250க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு அணிவகுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது.

Tags:    

Similar News