உள்ளூர் செய்திகள்

காட்டுபன்றி கறியை பங்கு வைத்த 2 பேர் கைது - ரூ.39 ஆயிரம் அபராதம்

Published On 2022-10-09 14:52 IST   |   Update On 2022-10-09 15:47:00 IST
  • காட்டுபன்றி கறியை பங்கு வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • வன அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிகுமரன் மேற்பார்வையில் வனவர் பிரதீப்குமார், வனக்காப்பாளர்கள் செல்வகுமாரி, ராஜீ, ஜெஸ்டின் செல்வராஜ், வனக்காவலர் அறிவுசெல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் அம்மாபாளையம் பிரிவு புலியூர் பீட் எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுப்பன்றியை கூறு போட்டுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் சங்கர் (வயது 47), தங்கராஜ் மகன் சுப்ரமணியம் (44) என்பதும், சங்கரின் வயல்காட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட நாய், மக்காசோள பயிர் காட்டிற்குள் வந்த காட்டுப்பன்றியை கடித்து குதறியதால் இறந்துபோனது. நாங்கள் அதனை எடுத்து சமைப்பதற்காக கறியை கூறுப்போட ்டுக்கொண்டிருந்தோம் என்றனர்.

இது குறித்து பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் வழக்கு பதிந்து சங்கர், சுப்ரமணியம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த காட்டு பன்றிகறியை பறிமுதல் செய்து அவர்களுக்கு 39 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Tags:    

Similar News