உள்ளூர் செய்திகள்

மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்ட போது எடுத்தபடம்.

செங்கோட்டை நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு முகாம்

Published On 2022-06-27 09:37 GMT   |   Update On 2022-06-27 09:37 GMT
  • ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
  • தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையாளா் பார்கவி, மேலாளா் கண்ணன், பொறியாளா்கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வரவேற்று பேசினார்.

அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் நகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு குப்பைகளை வாங்கும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, முருகையா, வேம்புராஜ், செண்பகராஜ், பேபிரெசவுபாத்திமா, மேரிஅந்தோணிராஜ், சுகாதார மேற்பார்வையாளா்கள், தூய்மை இந்திய திட்ட பணியாளா்கள், பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News